2025 மே 24, சனிக்கிழமை

முபீனுக்கு நியமனம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 26 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழுக்களைப் புனரமைப்பு செய்வதற்கான தீர்மானம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், நேற்று (25) நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுவதிலும், கிராம மட்டத்திலிருந்தே கட்சியை மீள் புனரமைப்புச் செய்வது தொடர்பில், இதன்போது விசேடமாக ஆராயப்பட்டது.

இதன் முதற்கட்டமாக, மாவட்ட மத்திய குழுக்களைப் புனரமைத்து, பின்னர் அதனைத் தொடர்ந்து கிராம மட்டத்தில் கட்சியைப் புனரமைத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி தீர்மானத்துக்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை புனரமைப்பதற்கான ஏற்பாட்டாளராகவும் ஒருங்கிணைப்பாளராகவும், கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X