கனகராசா சரவணன் / 2018 மே 16 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமெனக் குற்றஞ்சாட்டிய, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், அவ்வாறான கட்சி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் மாவீரர் தின நிகழ்வுகளிலும் கலந்துகொள்வது, இறுதிவரைக்கும் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகங்களுக்கும் இலட்சியத்துக்கும் செய்யும் பச்சைத்துரோகம் எனவும் குறிப்பிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வது தொடர்பாக இன்று (16) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தமையாலேயே, போராட்டம் வலுப்பெற்றது என்பதையும், ஜனநாயக ரீதியான போராட்டத்தின் வாயிலாக தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி வந்த தமிழ் மக்கள், மூன்று தசாப்தங்களாக ஆயுத ரீதியான போராட்டத்தின் மூலம் தமது அரசியல் அபிலாஷைகளை உலகறியச் செய்தனர் என்பதையும், அவர் இவ்வறிக்கையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர், “தமிழர் ஒரு சிறுபான்மை இனமல்ல, நாம் ஒரு தேசிய இனம். எமக்கென தனியான மொழி, கலை, கலாசாரம், வரையறுக்கப்பட்ட வரலாற்று, தாயக நிலப்பரப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு உண்டு.
“எமது மக்களின், உறுதியான அரசியல் நிலைப்பாடே முள்ளிவாய்க்கால் பேரவலமாகும். இறுதிவரைக்கும் ஓர் உறுதியான கொள்கைக்குப் பின்னால் அணிதிரண்ட மக்களின் தியாகம், அவர்களின் இலட்சியம் கொச்சைப்படுத்தக்கூடாது" என்று குறிப்பிட்டார்.
எனினும், மக்களின் இழப்பில், சிலர் பிழைப்பு நடத்துகின்றனர் எனவும், அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்து, போர்க்குற்றப் பொறுப்புக் கூறலை நீர்த்துப் போகச் செய்வதற்கு முயல்கின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், கால அவகாசங்களைப் பெற்று, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றனர் எனவும் குற்றஞ்சாட்டினார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago