எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் இணக்கப்பாடான தீர்மானமே ஆரோக்கியமானது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, இன்று (06)விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது இலங்கையில் நடைமுறையிலுள்ள முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம் அவசியம் என்பதற்கான கால, சூழ்நிலைத் தேவைகள் உள்ளன என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
“இந்த வகையில், இஸ்லாமிய சட்ட வரன்முறைக்கு அமைய, பரந்த நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகிறது.
“காதி நீதிமன்ற நடைமுறைகளில் உள்ள இடைவெளிகள், தவறுகள் சீர்செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட பலர் முன்வைத்துவரும் அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் அனைவரின் முன்னேயும் உள்ளது.
“பாதிப்புக்குள்ளானோரைக் கருத்தில் கொண்டாவது, இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
“இது இவ்வாறிருக்க, இந்த ஆலோசனைக் குழுவினர் மத்தியில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்றியுள்ளன. அவை இருவேறு அறிக்கைகளாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
“இவ்விரு கருத்துகளிடையேயும் குறைந்தபட்ச பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் உரையாடலும் பொறிமுறையும் இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago