Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றினால் இது வரை 145 பேர் மரணமடைந்துள்ளதாகவும், இதில் மூன்றாவது அலையில் மாத்திரம் 136 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி நா.மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று ( 14 )நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”முதலாம் கட்ட தடுப்பூசியினை இரண்டு இலட்சத்து அறுபத்து ஐந்தாயிரம் பேர் பெற்றுக்கொண்டுள்ளதுடன், இரண்டாம் கட்டத் தடுப்பூசியினை அறுபதாயிரம் பேர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.
மேலும் இதுவரை இத்தொற்றினால் மரணித்தவர்களில் ஆண்கள் 82 பேரும், பெண்கள் 63 பேரும் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளதோடு ஓட்டமாவடி சூடுபத்தினச் சேனையில் கொரோனா உடலங்களை அடக்குவதற்கு இடப்பற்றாக்குறை நிலவுவதாகவும், புதிய இடத்தினை அரசாங்கம் அடையாளம் கண்டு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
38 minute ago
1 hours ago