Princiya Dixci / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 37 பேர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில், இன்று (03) புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் சுத்தப்படுத்தும் நிகழ்வு, பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், கிராம சேவை அதிகாரி எஸ்.வரதராஜன், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு, வீடுகள் மற்றும் பொது இடங்களை சுத்தப்படுத்தலில் ஈடுபட்டனர்.
அதேவேளை, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த வருடம் ஜனவரி முதல் டிசெம்பர் 31ஆம் திகதி வரை 587 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தின் முதல் மூன்று நாட்களுக்குள் மாத்திரம் 37 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் மேலும் தெரிவித்தார்.
33 minute ago
38 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
17 Dec 2025
17 Dec 2025