2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மெதடிஸ்த கல்லூரியின் பரிசளிப்பு விழா

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா, அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் காட்மண்ட் மண்டபத்தில் நாளை (27) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. 

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் ஜே.எஸ்.டீ.எம்.அசங்க அபேவர்த்தன, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டவூள்யு.ஜீ.திசாநாயக்க, கிழக்கு மாகாண  கல்வித் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஷாம் ஆகியோர்களும் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன்,பாடசாலை வேலைத்தள மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.எம் ஹஹீம் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில், 300 மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனரென, பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X