Princiya Dixci / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாகரை பிரதேச கேணி நகர், நாவலடியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுனவின் பெயரைப் பயன்படுத்தி, போலிப் பிரசார கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கெதிராக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுனவின் மீராவோடை வட்டாரத் தலைவர் றபீக் ஏ கபூர் தெரிவித்தார்.
இந்தப் போலிப் பிரசாரக் கூட்டம்தொடர்பில் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்குத் தெரியப்படுத்தியமையை அடுத்து, மாவட்டங்களுக்குப் பொறுப்பான கட்சி உத்தியோகத்தர், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவலுக்கு அமைய, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான கூட்டங்களைக் கூட்டி, பொய்யான வாக்குறுதிகளுடன் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago