Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
வ.துசாந்தன் / 2017 மே 29 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.துசாந்தன்
மட்டக்களப்பில்; கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் பொலிஸார் சிலரும் வாகனச் சாரதிகளும் மொழிப் பிரச்சினையால் தொடர்பாடலில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்றுக் கருத்;துத் தெரிவிக்கையில், 'மட்டக்களப்பில்; கடமையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துப் பொலிஸார்; சிலருக்கு தமிழ்மொழி தெரியாமல்; இருப்பதன் காரணமாக தொடர்பாடல் பிரச்சினையில் இங்குள்ள வாகனச்; சாரதிகள் நாள் தோறும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நான் கடிதம் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, அக்கடித்தை கவனத்திற்கொண்ட ஜனாதிபதியின் செயலாளர், மட்டக்களப்பில்; தமிழ்மொழி; தெரிந்த பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு அல்லது பொலிஸாருக்கு தமிழ்மொழியைக் கற்பிக்குமாறு சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரையில் குறித்த பிரச்சினை நிவர்த்தி செய்யப்படவில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago