Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 20 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
“அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது” என, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணையடியில் நேற்று (19) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அரசாங்கத்தினுடைய பங்காளி கட்சியாக உள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ள மஹிந்த அணிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்காமல், சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“எமது பங்காளி கட்சியை எதிர்க்கட்சி தலைவராக வைத்திருந்தால் நாங்கள் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கு அது உதவும் என்ற காரணத்துக்காக எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஓர் அரசமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அரசமைப்பை பார்த்தால் இது முற்றுமுழுதாக ஒற்றையாட்சிக்குரிய அரசமைப்பாக உள்ளது. சாதாரண மக்களுக்கு இதன் நுணுக்கங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது.
“ஒற்றையாட்சி முறையை சிங்கள மக்களின் கையில் கொடுத்திருக்கின்ற படியால் தான் தென் தமிழ் தேச மண் பறிபோயுள்ளது. ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் பௌத்த நாடு வட - கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்வது பௌத்த நாட்டின் கனவுக்கு சவாலாக இருக்கின்றது.
“தமிழ் மக்களின் வட-கிழக்கு தாயக பிரதேசம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் வட-கிழக்கில் வாழ்வது தங்களுக்கு சர்வதேச சட்டத்தின் படி ஆட்சி உரிமை இருக்கின்ற படியால் வாழ்ந்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் சர்வதேசம் தமிழ் மக்களுக்கு வழங்கிய சட்டத்தின் படியான ஆட்சி உரிமையை அங்கிகரிக்கக்கூடும்.
“அங்கிகரித்தால் சிங்கள ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் என்ற கனவு இல்லாமல் போகும். பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து ஒற்றையாட்சி அரசமைப்பை உருவாக்கி, சிங்கள தலைவர்கள் ஆட்சி செய்து எங்களது தாயக நிலப்பரப்பை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago