2025 மே 07, புதன்கிழமை

யானைகள் விரட்டியடிப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனை மற்றும் மண்டூர் காட்டுப்பகுதிகளில் தங்கியிருந்து மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திவந்த காட்டு யானைகள் கண்ணியம்பைக் காட்டுப்பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை மாலை விரட்டப்பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச வனவள சுற்று வட்டார காரியாலயத்தின் அலுவலர் பி.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்று பிரதேச சுற்றுவட்டக காரியாலய அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கிராமங்களை அண்டிய சிறிய காடுகளுக்குள் நின்ற 5 காட்டு யானைகளே இவ்வாறு விரட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X