2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி இளம் தம்பதி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, நெல்லிக்காடுக் கிராமத்தில் திங்கட்கிழமை (19) நள்ளிரவு யானை தாக்கியதில், கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கிராமத்தினுள் புகுந்த யானை, இவர்கள் வசித்துவந்த குடிசையைத் தாக்கியுள்ளது. இதன்போது கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ரி.மோகனதாஸ் (வயது 30), சுயமலர் (வயது 17) ஆகியோரே யானையின் தாக்குதலுக்குள்ளாகினர்.

இவர்கள் இருவரும் திருமணமாகி சுமார் 10 மாதங்களாக  குடிசையில் வசித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X