2025 மே 07, புதன்கிழமை

யானையின் தாக்குதலில் கூரை சேதம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வக்கியல்லை 35ஆம் கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானையின் தாக்குதல் காரணமாக வீடொன்றின் கூரை சேதமடைந்துள்ளது.  

தாம் உறக்கத்திலிருந்தபோது பாரிய சத்தம் கேட்டது. இந்நிலையில், எழும்பிப் பார்த்தபோது வீட்டின் முன்பகுதியிலிருந்த இரண்டு தவிடு மூடைகளையும் உட்கொள்வதற்கு யானையொன்று முயற்சித்துள்ளது. இக்காட்டு யானையை தாங்கள் விரட்டியதாகவும் இதன்போது, ஆத்திரமடைந்த யானை தங்களை தாக்குவதற்கு முற்பட்டபோது தாங்கள் இருவரும் வீட்டினுள் சென்றதாகவும் இந்நிலையிலேயே யானை வீட்டுக் கூரையை சேதப்படுத்தியதாகவும் அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.  

இது சம்பந்தமாக கிராம சேவை உத்தியோகஸ்தர், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்;, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திலும் ஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X