2025 மே 09, வெள்ளிக்கிழமை

யாப்பு சீர்திருத்தம்; சிறுபான்மையினரின் அபிப்பிராயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 10 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
 
'கடந்த காலத்தில்; எமது நாட்டில் ஆட்சியாளர்களினால் பல்வேறு சந்தரப்பங்களில்; மேற்கொள்ளப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தங்களின்போது, சிறுபான்மைச் சமூகங்களான தமிழர் மற்றும் முஸ்லிம்களின் அபிப்பிராயங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதேவேளை எதிர்க்கட்சிகள் எதிர்த்த வரலாறுகளே உண்டு என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
 
வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நடவடிக்கை, ஏறாவூர் ஆறாம் கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் அங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் அனைத்து இனங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்கள் பெற்றுக்கொண்டு அரசியல் யாப்பு சீர்திருத்தம் நடைபெறுகின்றமை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஏதுவாக அமையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் கருத்துகளை முன்னிலைப்படுத்துவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடசங்கற்பத்துடன் செயற்படுகிறது'; என்றார்.

'ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி அரசியல் யாப்பு சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து சிறுபான்மையினருக்கு துரோகம் செய்த இருள் சூழ்ந்த யுகம் கடந்து விட்டது' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X