Editorial / 2018 மே 11 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில், யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தவர் ஒருவர், உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாகனேரி சுற்றுலா விடுதி வீதியைச் சேர்ந்த, 33 வயதுடைய கால்நடை வளர்பாளரான, 3 பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான நேற்று இரவு 11 மணியளில் கால்நடைகளை பட்டியில் கட்டிவிட்டு, வாகனேரி குளத்தில் குளிக்கச் சென்றபோது, குளப்பகுதியில் வைத்து யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025