2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ரெதிதென்ன விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் பலி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெதிதென்னப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

மட்டக்களப்பு –கொழும்பு நெடுஞ்சாலையில் எல்ப் ரக  வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதால்  ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர்களே பலியாகியுள்ளனர்.

அநுராதபுரம் முகடவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களான கே.பி.நிஹால் பண்டார (வயது 47), கே.பி.என்.குணரத்ன (வயது 38) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில், வெலிக்கந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்தைத் எல்ப் ரக வாகனச் சாரதியை பொலிஸார்; கைதுசெய்ததுடன், வாகனத்தையும் கைப்பற்றி வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்த விபத்துக் குறித்து வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X