2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரண விரு சேவையின் கீழ் வீடுகளைப் பெறுவதற்கு ’காணிகள் இல்லை வருத்தமே’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரண விரு சேவையின் கீழ் வீடுகளைப் பெறத் தகுதிபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களுக்கு, வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கு, காணிகள் அற்ற நிலை காணப்படுவது கவலையளிப்பதாக, ரண விரு சேவா அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
"ரண விரு சேவா" குடும்பங்களின் நலன்புரி மாதாந்தக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (26), இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர், "எந்த மதபோதமும் இன்றி, யுத்தத்தின் போது, இராணுவமும் பொலிஸும், கடமையில் இணைந்திருந்து, தங்களது உடல் உறுப்புகளை, தங்களைச் தியாகம் செய்தவர்களின் குடும்ப நல்வாழ்வுக்காக, ரண விரு சேவா அதிகாரசபை செயலாற்றி வருகின்றது. அக்குடும்பங்களின் நல்வாழ்வுக்காக, அடிப்படை வசதியாக வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படுகின்றன" என்று தெரிவித்தார்.
"ரண விரு சேவா" பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்காக, தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம், கடந்தாண்டு ஜூன் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவுக்கு வந்துள்ளது எனக் குறிப்பிட்ட அவர், அடுத்த கட்டமாக, 56 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்தார். இவ்வீடுகளுக்குக் காணிகள் தேவைப்படுகின்ற போதிலும், சில வீடுகளுக்கான காணிகள் இல்லாத நிலை காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.
"இக்காணிகளைப் பெறுவதற்கு முடியாத நிலையில், 22 குடும்பங்கள் இருக்கின்றன. எவ்வாறெனினும், அவர்கள் வீடமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டு, தங்களது வீடுகளை நிர்மாணித்துக் கொள்வதற்கு முயல வேண்டும்” என்று அவர் இதன்போது கூறினார்.
மேலும், ஏற்கனவே 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அமைந்த வீடுகளை நிர்மாணித்துப் பூர்த்தியாக்கியுள்ளவர்களுக்கு, விசேட தேவைகள் ஏதுமிருப்பின், சுமார் 3 இலட்ச ரூபாய், இலகு வட்டியுடனான கடன் வசதி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X