Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி திங்கட்கிழமை (17) பயணித்த மீனகயா என்ற ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் பயணி ஒருவர் சிறு காயமடைந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, திராய்மடுப் பகுதியிலேயே இனந்தெரியாதோரால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, குறித்த ரயில் சில நிமிடங்கள் அவ்விடத்தில் தாமதமதித்துப் பின்னர் கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .