Princiya Dixci / 2021 ஜனவரி 07 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதி, ஏறாவூர் ரயில் நிலையத்து அருகாமைமயில் தண்டவாளத்தில் வேலைக்கு நடந்து சென்ற ஒருவர், இன்று (07) உயிரிழந்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 3 பிரிவு , மகளிர் பாடசாலை வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஜமால்டீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நிலையில், ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரோத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .