Editorial / 2021 டிசெம்பர் 05 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, திராய்மடுவில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார் என்பவர் ரயிலில் மோதி, இன்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளார் என மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி, அதிகாலை 5.45 மணிக்குச் சென்ற ரயிலில் இவர் மோதியுள்ளார் எனவும் உயிரிழந்தவர் மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Feb 2026