Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ராஜபக்ஷவின் குழுவினர் செய்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும் மறந்து விடமுடியாது. எனவே, ராஜபக்ஷவின் குழுவினருக்கு ஒரு போதும் பொதுமக்கள் இடமளிக்கக் கூடாது” என, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்த நாட்டில் மீண்டும் இனவாதத்தைத் தூண்டி, ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற முனைகின்றார். இதற்கு, விமல் வீரவன்ச போன்ற சிலரும் ஒரு சில பிக்குகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றார்கள்.
“இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, மக்கள் விடுதலை முன்னணி, கடந்த ஒருவருடத்துக்கு முன்பே எதிர்பார்த்தது. அதனால், கிராமங்கள் தோறும் பிரஜைகள் அமைப்பை உருவாக்கி, அதனூடாக மக்கள் வேலைத்திடடங்களை நாம் முன்னெடுத்தோம்.
“அந்த வகையில், நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு உடட்பட அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் மக்கள் விடுதலை முன்னணி போட்டியிட நடவடிக்கை எடுத்து வருகின்றது.
“மட்டக்களப்பு மாநகர சபை; காத்தான்குடி, ஏறாவூர் நகர சபைகள்; ஓட்டமாவடி, வாழைச்சேனை, மண்முனைப்பற்று, வாகரை போன்ற பிரதேச சபைகளிலும் மக்கள் விடுதலை முன்னணி களமிறங்கும். இதற்கான வேட்டபாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
“மட்டக்களப்பு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும் அமைப்பாளராகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி இருக்கின்றார். ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு சிறந்த அமைப்பாளரை எமது கட்சி விரைவில் நியமிக்கவுள்ளது.
“இந்த நாடு ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. மக்கள் விடுதலை முன்னணி மாத்திரம்தான் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற, மக்களோடு மக்களாக இருந்த கடமையாற்றுகின்ற ஒரு கட்சியாகும். அதனால், இந்த நாட்டின் நான்கு வருடங்களை எம்மிடம் தந்து பாருங்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago