2025 மே 20, செவ்வாய்க்கிழமை

லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள் லயன்ஸ் கழகம்,  ஹோமாகம் லயன்ஸ் கழகத்துடன் இணைந்து, பொதுமக்களுக்கு இலவசமாக சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவை வழங்குவதற்காக  மட்டக்களப்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் நாளை மறுதினம் (28) காலை 08.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இந்த மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக, கழகத்தின் செயலாளர் அன்பழகன் குருஸ் தெரிவித்தார்.

இம் மருத்துவ முகாமில், இலவசமாக வாசிப்புக் கண்ணாடிகள், இலவசமாக சகல நோய்களுக்குமான மருந்துகள், சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள், பெண்களுக்கான மார்புப் புற்றுநோய்ப் பரிசோதனை, சிறுவர்கள் மற்றும் வளர்ந்தோருக்கான பல் சிகிச்சை, குடும்ப நலம் மற்றும் குடும்பத் திட்டமிடல், சத்துணவு நிகழ்ச்சித் திட்டங்கள் போன்ற பல்வேறு சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகள் பல சிறந்த வைத்தியர்களால் இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X