Niroshini / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
எருவிலை சேர்ந்த இளையதம்பி சோமசுந்தரம்(வயது 65)என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் மட்டக்களப்பில் உள்ள நீதிமன்றத்துக்கு கடமைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை,முச்சக்கர வண்டி சாரதியை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago