Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை காத்தான்குடி பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (22) இரவு முன்னெடுக்கப்பட்டபோது, 107 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 10 லொறிகளும் 06 வான்களும் 04 பஸ்களும் 87 முச்சக்கரவண்டிகளும் போக்குவரத்துக்கு உகந்தனவா என்பது தொடர்பில் பரிசோதிக்கப்பட்டன. இந்நிலையில், திருத்தவேண்டிய வாகனங்கள் மற்றும் போக்குவரத்துச் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு உட்படாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அவற்றை திருத்துவதற்கான ஆலோசனையும் கால அவகாசமும் வழங்கப்பட்டன.
வாகன விபத்துகளை இல்லாமல் செய்வதற்காகவே வாகனங்கள் பரிசோதிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வரும் வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை, ஒவ்வொரு மாதத்திலும் ஒரு தடவை முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago