Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனானை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் மீயான்குளம் சந்தியில் இருந்து காரமுனை பிரதேசத்துக்குச் செல்லும் வழியில் கோறளைப்பற்று பிரதேச சபையால் கொட்டப்படும் குப்பைகளால் யானைகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதாகவும் அப்பகுதியில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் கோரியும் காரமுனை பிரதேச மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 03.00 மணியளவில் அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்தி தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
வாகரை பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மீயான்குளம், காரமுனை, ஓமடியாமடு பிரதேசங்களுக்குச் செல்லும் வழியில் வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்கு வரும் யானைகளினால் அவ்வழியே பயணிக்கம் பொதுமக்கள் தாக்கப்படுவதாகவும் அப்பகுதியை அண்மித்த பகுதிகளை சேர்ந்த குடியிருப்புக்கள் மற்றும் வீட்டுத்தோட்டங்களை நாசப்படுத்துவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு யானைவேலிகளை அமைத்துத் தருவதுடன் பிரதேச சபைகளால் கொட்டப்படும் குப்பைகளை அப்பகுதிகளில் கொட்டாமல் மாற்று இடம்களை தெரிவு செய்து அந்தப்பகுதிகளில் கொட்டுவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் மகஜர் ஒன்றினையும் கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீனிடம் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago