Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வழிகாட்டிகள் பூங்கா என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இடம்பெற்ற விஞ்ஞானக் கண்காட்சியில் விசேட தேவையுடையோருக்காக காவிச்செல்லக் கூடிய, நெகிழ்வுத் தன்மையுள்ள, சீராக்கம் செய்யக் கூடிய பற்தூரிகையைக் கண்டு பிடித்தமைக்காக விஞ்ஞான புத்தாக்குநர் பிரிவில் மட்டக்களப்பு புனித வின்சென்ற் கல்லூரியில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவி றொமிக்கா அன்ரூவ் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
விஞ்ஞான புத்தாக்குநர் போட்டியில் வெற்றி பெற்ற புத்தாக்குநர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதலிடத்தைப் பெற்ற றொமிக்கா கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் அன்ரனி அன்ரூவின் புதல்வியாவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago