2025 மே 08, வியாழக்கிழமை

வீடுகள் தோறும் டெங்கு பரிசோதனை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,வி.சுகிர்தகுமார்

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினையொட்டி காத்தன்குடி சுகாதார அலுவலகப்பிரிவினால், வீடுகள் தோறும் டெங்கு பரிசோதனை செய்யும் நடவடிக்கை சனிக்கிழமை (12) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படையினர், சுகாதார அதிகாரிகள் இந்த டெங்குப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மழை காலம் தொடங்கவுள்ளதால் டெங்கு நுளம்பு பெருக்கமும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால், இது தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடடிக்கையாக தேசிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் டாக்டர் நசிர்தீன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை (15) வரை நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X