2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீட்டுக்கூரையை பிரித்து கொள்ளை

Gavitha   / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 2ஆம் குறிச்சியிலுள்ள வீடொன்றின் வீட்டுக்கூரை பிரிக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு (23) இந்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. வீட்டு உரிமையாளரான, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் பி வலய சமூர்த்தி முகாமையாளராக கடமையாற்றும் ஏ.எல்.சுல்மியி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த  மாதமும் இதே வீட்டில் வீட்டுக்கூரை  பிரிக்கப்பட்டு  கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X