2025 மே 12, திங்கட்கிழமை

வீட்டு ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளை

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித், அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள கல்முனைக்குடி - 03 செயிலான் வீதியிலுள்ள வீடொன்றில் 7 இலட்சத்து 25ஆயிரம் பெறுமதியான நகைகள், நேற்று வெள்ளிக்கிழமை (12) இரவு ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான முறைப்பாட்டை வீட்டு உரிமையாளரான சாஹூல் ஹமீட் முஹம்மட் றிஸ்வான் பதிவு செய்துள்ளார். 

இம்முறைப்பாட்டில், தாங்கள் பிற்பகல் 5 மணிக்கு வைத்தியசாலைக்கு சென்று மீண்டும் இரவு 09 மணியளவில் வீடுதிரும்பிய நிலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X