Kanagaraj / 2015 ஒக்டோபர் 29 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் இன்று வியாழக்கிழமை மாலை வெடிப்பொருட்;கள் கண்டு பிடிக்கப்பட்டதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் வெள்ளம் காரணமாக தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வழிந்தோடச் செய்யும் முகமாக பெக்கோ இயந்திரத்தின் துணையுடன் வடிகான் அமைக்கும் பணியினை கல்குடாவில் முன்னெடுத்தனர்.
இதன்போது மர்பப்பொருள் ஒன்று தென்படுவதனையடுத்து அருகில் உள்ள கல்குடா பொலிசாருக்கு தகவல் வழங்கியமையியைடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர் பின்னர் குறித்த மர்பப் பொருள் ஆட்லறி 122 மோட்டார் குண்டு என அடையாளம் கண்டனர்.
பின்னர் குண்டு செயழிக்கச் செய்யும் தொப்பிகலை இராணுவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டு அவற்றினை செயழிலக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு கருதி பொலிசாரின் பதிலை எதிர்பார்த்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபையின் செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.


6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago