Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மீனவர் வாடிவீடு இன்று வெள்ளிக்கிழமை கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் திறந்து வைக்கப்பட்டது.
784,000 ரூபாய் விசேட நிதியொதுக்கீட்டில் இக்கட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
செட்டிபாளையம் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் த.விந்தியன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் உட்பட கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவர் சங்க உறுப்பினர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கிராமிய பொருளாதாரப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி '1983ஆம் ஆண்டுக்கு முன்னர் மட்டக்களப்பு மாட்டத்தில் தமிழர்களும் முஸ்லிம்;களும் எவ்வாறு உறவாக வாழ்ந்தார்களோ, அவ்வாறு மீண்டும் இந்த நல்லாட்சியில் வாழத் தொடங்கியுள்ளனர்.
நான் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பேதம் மறந்து அரசியல் மேற்கொள்ளும் ஒரு சாணக்கியமான அரசியல்வாதி. எந்த மக்களுக்கு என்ன தேவை ஏற்படுகின்றதோ அதனை நான் பூர்த்தி செய்து கொடுக்கப் பின்னிப்பதில்லை.
கடந்த கால கசப்பான விடயங்கள் அனைத்தையும் தமிழ்ர்களும் முஸ்லிம்களும் மறந்துவிட்டு புரிந்;துணர்வுடன் வாழவேண்டும். எனக்கு அனைத்து சமூகத்தையும், சமமாக மதிக்வேண்டிய தார்மிக பொறுப்பு உள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அதிகளவு தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு கிழக்கு மாகாணசபைக்கு உண்டு. இவற்றைச் செய்யாத கிழக்கு மாகாணசபை தேவைதான என்ற எண்ணமும் சிந்தனையும் தற்போது எமக்கு எழுந்துள்ளது. எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையை வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் அம்மாகாணசபையிலுள்ள அரசியல்வாதிகள், அதிகாரம் இருக்கின்றது என்ற இறுமாப்போடு பேசகின்ற விடயங்களுக்கு மக்கள் தக்கபாடம் புகட்டுவார்கள். எனவே எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபை மிகவும் திறம்படஇயங்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago