2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரசபையினால் பெண்களுக்கான ஆறு மாதங்கள் கொண்ட தையல் பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டள்ளதாக மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட க.பொ.த. சாதாரணம் படித்த 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று 23.10.2015 முன்பு மாநகர ஆணையாளர், மாநகரசபைஈ மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை  2 மணித்தியாலங்கள் கொண்ட வகுப்புக்கான அனுமதிக் கட்டணம் ரூபாய் 100 மற்றும் மாதாந்தக் கட்டணம் ரூபாய் 50 மட்டுமே.

பயிற்சியின் முடிவில் நடத்தப்படும் பரீட்சையில் சித்தி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X