2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வைத்தியசாலைகளுக்கு தரம் உயர்வு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.ஹனீபா,வடிவேல் சக்திவேல்,பைஷல் இஸ்மாயில்,எம்.எஸ்.எம்.நூர்தீன்,பதுர்தீன் சியானா,  எப்.முபாரக்   

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரம் உயர்த்துவதற்காக தன்னால் முன்மொழியப்பட்ட யோசனைக்கு கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் ஒப்புதலளித்துள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் செவ்வாய்க்கிழமை (16) மாலை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் முதலமைச்சர் செயலகத்தில் கூடியபோதே, இந்த ஒப்புதலளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி,  இவ்வருடத்துக்கான ஒதுக்கீடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அம்பாறையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள அன்னமலை ஆரம்ப வைத்தியப் பிரிவு சி தரத்துக்கும் மத்திய முகாம் சி தர வைத்தியசாலை பி தரத்துக்கும் இறக்காமம் சி தர வைத்தியசாலை ஏ தரத்துக்கும் ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவு சி தரத்துக்கும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை ஏ தரத்துக்கு தரம் உயர்த்தப்படவுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள சந்திவெளி சி தர வைத்தியசாலை பி தரத்துக்கும்  மையிலடித்தீவு சி தர வைத்தியசாலை ஏ தரத்துக்கும் தரம் உயர்த்தப்படவுள்ளன.

இதேவேளை திருகோணமலை, இறக்கக்கண்டிப் பிரதேசத்தில் புதிதாக மத்திய மருந்தகத்தை அமைக்கவும் அமைச்சரவை வாரியம் அனுமதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X