Niroshini / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட விஜயபுரம் விகாரை குறுக்கு வீதியின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது இழுபறி நிலையில் உள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
விஜயபுரம் விகாரை வீதியில் இருந்து பன்சாலை குறுக்கு வீதியூடாக கூழாவடி புகையிரத கடவை பக்கமாக செல்லும் இவ்வீதி கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வீதியாகும்.
15000 கிராமங்களை அபிவிருத்தி செய்யும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி குழு கூட்டத்தில் பொதுமக்களால் இவ்வீதி செப்பனிடப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதன் முதல் கட்டமாக கற்கள், மணல் என்பன ஒரு மாதங்களுக்கு முன்பு வீதியின் நடுவில் கொட்டப்பட்டன. ஆனால் இதுவரை இவ் வீதி செப்பனிடப்படாமல் இருப்பதால் அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கூறுகையில்,
குறித்த வீதியின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.
தேர்தலையொட்டி அபிவிருத்தி பணிகளை இடைநிறுத்துமாறு கோரப்பட்டதன் அடிப்படையிலேயே இந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டன என்றார்.

1 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago