2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீதியின் இருமருங்கிலும் கழிவுகள்;மக்கள் விசனம்

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு,துறைநீலாவணை கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதியின் இருமருங்கிலும் இனம்தெரியாதவர்கள், கோழி இறைச்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை மூட்டைகளில் இட்டு வீசிச்செல்வதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால், வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மிகுந்த அசௌசரிகங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் விற்பனை செய்யும் கோழி இறைச்சி கடை உரிமையாளர்கள் சட்டதிட்டத்துக்கு முரணான வகையில் இக்கோழிக் கழிவுகளை அதிகாலை வேளையில் வீசிவிடுகின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அதிகளவான கோழிக் கழிவு மூடைகள் இவ்வீதியில் சூட்சகமமான முறையில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இவ்வீதியை துறைநீலாவணை கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர் மாதத்துக்கு ஒரு தடவை சிரமதானம் மூலம் துப்பரவு செய்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கழிவுகள், பிளாஸ்ரிக் பொருட்கள், இலத்திரனியல் உபகரணங்கள், பழைய போத்தல்கள், பழைய வீட்டுக்கழிவுகள் என்பவற்றையெல்லாம் வீசி வருகின்றனர்.

எனவே,கோழி இறைச்சி விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் போது கோழிக்கடைகளின் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டோ்ர உடன் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் துறைநீலாவணை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் எஸ்.வேணிதரன் இன்று திங்கட்கிழமை கூறுகையில்,

இப்பிரதேசத்துக்குள் அத்துமீறி இவ்வாறு வீதி ஓரங்களிலும் குளக்கரைகளிலும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கழிவுகளைக் கொட்டுவது தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை கல்முனை மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்து உடன் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X