Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 07:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் செவ்வாய்க்கிழமை பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மைலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.முத்துலிங்கம்(வயது 65) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் படுகாயங்களுக்குள்ளான நபர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
இதேவேளை,மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரும் இவ்விபத்தில் காயமடைந்த நிலையில்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025