2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு,கொக்கட்டிக்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை நகரில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலை தபாலகத்துக்கு முன்பாக பஸ்ஸில் இறங்கி தபாலகத்துக்கு செல்ல முற்பட்ட பெண் மீது மோட்டார் சைக்கிளொன்று மோதியுள்ளது.

இதில்,முனைக்காட்டை சேரந்த பெண்ணும் கடுக்காமுனை நீர்ப்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்தவரும் படுகாயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்தப் பெண் கவனயீனமாக வீதியை கடக்கமுற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X