2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

Gavitha   / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட, களுவன்கேணி, கோறளங்கேணியில், நேற்று (31) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் பலியாகியதோடு, மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகூடிய வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வாய்க்கால் ஒன்றுக்குள் குடைசாய்ந்ததில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பின்னாலிருந்த, களுவன்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சுஜித் (வயது 22) என்பவர், தலைப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X