Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சாய்ந்தமருது 10ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது நிஸார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெருநாள் தினத்தன்று வியாழக்கிழமை (24) மதியம் கல்முனை பொலிஸ் பிரிவில் கல்முனைக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள நகர மண்டபத்திற்கு முனனால் மொண்டரோ ஜீப் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிய சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி குடும்பஸ்தர்
படுகாயமடைந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை (25) மாலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என கல்முனைப் பொலிசார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago