Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட புதிய காத்தான்குடியில் நேற்றிரவு(18) இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவனும் மனைவியும் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி மத்திய வீதியினால் கணவனும் மனைவியும் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த மோட்டார் சைக்கிள் பல சரக்கு கடைக்குள் புகுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் கணவனும் மனைவியும் படுகாயமடைந்ததுடன் குறித்த பல சரக்கு கடையின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த தளபாடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago