2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வியாழேந்திரன் எம.;பி. அச்சுறுத்தல் விடுத்ததாக பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரருக்கு நான் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி அவர் எனக்கு எதிராக கரடியனாறுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, வியாழேந்திரன் எம்.பி. தன்னை அச்சுறுத்தியதான முறைப்பாடு மட்டக்களப்பு மங்களராம விஹாரதிபதியால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை மேலும் தெரிவித்த எஸ்.வியாழேந்திரன் எம்.பி, 'மட்டக்களப்பு -பதுளை வீதியில் உள்ள குறித்த தனியார்  காணிக்குள் எவரும் உள்நுழைய முடியாது என்று ஏறாவூர் நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த வேளையில், அதற்குள் அத்துமீறி நுழைந்து சட்டத்தை அவமதித்த பிக்குவை கைதுசெய்ய முடியாது வெறுமனே கைகட்டிப் பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், இப்பொழுது மட்டக்களப்பு பிக்கு எனக்கெதிராகச் செய்துள்ள முறைப்பாட்டை விசாரிக்க பொலிஸ் நிலையம் வருமாறு என்னை அழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும், நான் சட்டத்தை மதித்து ஒழுங்கைக் கடைப்பிடிப்பவன் என்ற வகையில் பொலிஸ் நிலையம் சென்று எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவுள்ளேன்.

இந்த நாட்டின் தற்போதைய நல்லாட்சியிலும் சட்டம் சீர்குலைந்திருப்பதாகத்தான் நான் இந்த விடயத்தைப் பார்க்கின்றேன்.
இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாராபட்சமில்லாமல் அமுலாக்கப்பட்டிருந்தால் இத்தனை குழப்பங்களையும் அழிவுகளையும் இந்த நாடு சந்தித்திருக்காது' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X