Kogilavani / 2016 நவம்பர் 11 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன்
கிழக்குப் பல்கலைக்கழக 2015ஃ2016ஆம் கல்வியாண்டுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள முதலாம் வருட மருத்துவ மாணவர்களுக்கான விரிவுரைகள், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைகழக பதிவாளர் வி.காண்டிபன் தெரிவித்தார்.
எனவே, மாணவர்;கள் எதிர்வரும் 15ஆம் திகதி, இல-50, புதிய வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தமது பதிவுகளை காலை 09.00 மணிமுதல் மேற்கொள்ளலாம்.
அன்றைய தினம் பதிவுகளுக்கு பின்னர் விடுதி வசதிகளுக்கு உரித்துடைய மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு, 065-2227025, 065-2240731 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025