Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுக்கு உட்பட்ட உஸன் ஏற்றம் வாலமன்கேணிக் கிராமத்தில் அமைந்துள்ள 03 ஏக்கர் காணி ஒன்றைச் சுற்றி அடைக்கப்பட்ட முட்கம்பிவேலி மற்றும் 83 கொங்கிறீட் தூண்களைச் கிராம அலுவலகர் சேதப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு நேற்றுப் புதன்கிழமை கொண்டுசென்றதாக அக்காணி உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சேதம் காரணமாக சுமார் 118,000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர், மீள்குடியேற்ற அமைச்சர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவருமான மனோ கணேசன்;, கிழக்கு மாகாண ஆளுநர். முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும் கடிதம்; அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான வீதியில் உஸன் ஏற்ற மட்டக்களப்பு -கொழும்பு -திருகோணமலை முச்சந்தியில் அமைந்துள்ள இக்காணியை 1976ஆம் ஆண்டிலிருந்து தனது தந்தை வழியாகப்; பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக இக்காணியை விட்டு இடம்பெயர்ந்தபோது, இக்காணியைப் படையினர்; கைப்பற்றி முகாம் மற்றும் பாதுகாப்பு அரண் அமைத்துப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 08 வருடங்களுக்கு முன்னர் படையினர் இக்காணியிலிருந்து அகன்ற பின்னர் தமது காணியில் குடியேறிப் பயிர்ச்செய்கை மற்றும் நெற்செய்கையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
மேற்படி கிராம அலுவலர் இக்காணியை விட்டுத்தருமாறும் அதற்கான மாற்றுக் காணியை வழங்குவதாகவும் கூறினார். அதற்கு மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, மேற்படி கிராம அலுவலரினால் பிரச்சினை வந்தவண்ணமுள்ளதாகவும் அவர் கூறினார்.
26 minute ago
34 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
34 minute ago
6 hours ago
21 Dec 2025