2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளுக்காக ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

வேலையற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கையினை நிறைவுசெய்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் உள்ள உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கல்லூரிக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நியாயமான கோரிக்கையினை பூர்த்திசெய்ய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மாணவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

பட்டதாரிகளின் தொழில் உரிமையினை உறுதிசெய்,பட்டதாரிகள் பட்டம்பெற்ற வீதியில் சத்தியாக்கிரகம் செய்வதற்கா,நல்லாட்சி என்பது நஞ்சிஊட்டும் ஆட்சியா,ஆட்சிமாற்றத்தினால் பட்டதாரிகளுக்கு கிடைத்து என்ன,நடுவீதியில் பட்டதாரிகள் மாளிகையில் அரசியல்வாதிகள் போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பெருமளவான உயர் தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கினர்.


இதேவேளை, வேலையற்ற பட்டதாரிகளின்  சத்தியாகிக்ரகப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கிழக்குப் பல்கலைக் ழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X