2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெல்லாவெளியில் 23,100 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 13 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

இம்முறை வெல்லவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் 23,100 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை பண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. .

வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கான  சிறுபோக நெற்செய்கைக்கான  ஆரம்பக் கூட்டம், வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் இன்று (13)  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளுக்குக் கிடைத்த விளைச்சல், அவர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் காப்புறுதி நட்டஈடு வழங்குதல், நீர்ப்பாசனத் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பில்  ஆராயப்பட்டன.

மேலும்,  சிறுபோக நெற்செய்கைக்கான  நெல் விதைப்பை நாளை ஆரம்பித்து இம்மாதம் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும்  கால்நடைகளை நாளை முதல்  அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .