Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில் யானைகளின் தாக்குதல்களுக்குள்ளாகி இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஆறு பேர்; காயமடைந்ததாகவும் அப்பிரதேச செயலாளர் என்.வில்வரட்ணம் தெரிவித்தார்.
மேலும், யானைகளின் தாக்குதல்கள் காரணமாக இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தப் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னரும் யானை தாக்;கியதில் படுகாயமடைந்த ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .