Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 09 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
உடலுக்கு ஆரோக்கியம், உள்ளத்துக்கு விருத்தி மற்றும் மூளையை பண்படுத்தல் என்பன விளையாட்டினால் மேம்படுகின்றன என்று உடுவை தில்லை நடராசா தெரிவித்தார்.
கலாபூசணம் எஸ். எதிர்மன்னசிங்கம் தொகுத்த, சிறுவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுக்கள் நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (08), மட்டக்களப்பு பொது நுலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முதன்மை அதிதியாக அவர் கலந்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'குழுவாக இயங்குவதால், உறுதியாக இருக்கலாம். விளையாட்டில் உடல் மற்றும் உளம் என்பன செழுமை பெறுகின்றன. சிறு பிள்ளைகளின் கோபம் நிரந்தரமானதல்ல, விளையாடும் போது கோபப்பட்டாலும் விளையாட்டின் முடிவில் உறவாகி விடுகின்றனர்' என்ற அவர் கூறினார்.
'பாரம்பரிய விளையாட்டக்களில் உறவுகள் பலம் பெறுகின்றன. இவை நவீன விளையாட்டக்களிலிருந்து முற்றாக வேறுபடுகின்றன. இத்தகைய பாரம்பரிய விளையாட்டுக்களை தற்போதைய சிறார்கள் முற்றாக மறந்து விடும் நிலை காணப்படுகின்றன. தற்கால சிறுவர்களுக்கு இத்தகைய புத்தகங்களால் பாரம்பரிய விளையாட்டுக்களை தெரிந்துகொள்வதற்கான ஒரு களமாக இவை அமைந்துள்ளன' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
38 minute ago
1 hours ago