2025 மே 07, புதன்கிழமை

வெள்ள நீரில் மூழ்கி 16 வயது சிறுவன் பலி

Thipaan   / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வெள்ள நீரில் மூழ்கி 16 வயது சிறுவனொருன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிரான் புதிய கொலனியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி விஜய் என்ற சிறுவனே  உயிரிழந்துள்ளான்.
 
வீட்டைச் சுற்றி மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வீட்டுக்கு சற்று அருகிலுள்ள காட்டுக்குள் மலசலம் கழிப்பதற்குச் சென்றிருந்த வேளை தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
மலசலம் கழிக்கச் சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பாததையடுத்து இவரது சகோதரி தேடிச் சென்றபோது இவர் தண்ணீரில் முகம்குப்புற வீழ்ந்து கிடந்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று எம்.எஸ்.எம்.நஸீர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார்.
 
ஏறாவூர்ப் பொலிஸ் சார்ஜன் ஏ.இசட்.ஹஸன் சாட்சியங்களைப் பதிவு செய்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X