2025 மே 07, புதன்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து விதிகள், வீதி விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் இவ்விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று திங்கட்கிழமை பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் களுவாஞ்சிகுடி வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் துரிதமாக முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் எஸ்.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்துப் பொலிஸார்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது,வீதி விபத்துக்கள் தொடர்பான காணொலிகள்,விபத்துக்களை தவிர்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வீதி ஒழுங்கு தொடர்பான விளக்கங்கள் என்பன பொலிஸாரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X