2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வும் கொடிவாரமும்

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மதவிவகார கலாசார அலுவல்கள் அமைச்சின் விசேட திட்டத்தின் கீழ் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஊடாக அமைதியான ஒழுக்கமான, முழுமையான சிறந்த மனிதர்களைக் கொண்ட தேசத்தை ஒன்றுபட்டு கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கொடிவார நிகழ்வும் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மண்முனை தென் எருவில்பற்று(களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி டிமாலின் நிராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல் கொடி மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று(களுவாஞ்சிகுடி)பிரதேச செயலக பிரதேச செயலாளர் மா.கோபாலரட்ணத்துக்கு அணிவிக்கப்பட்டது.

பிரதேச கலாசார அதிகார சபையை பலப்படுத்தும் வகையில் இதன்போது கொடிவிற்பனையும் ஸ்டிக்கர் விற்பனையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X