Niroshini / 2016 ஜனவரி 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகளுக்கு, வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக தலைமை முகாமையாளர் திருமதி பாத்தும்மா பரீட், அதன் முகாமைத்துவப்பணிப்பாளர் எம்.வாமதேவன், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி ஏ வலய முகாமையாளர் ஏ.எல்.இசட் பௌமி, கருத்திட்ட உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.இப்றாகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி திட்ட பயனாளிகள் 180 பேருக்கு, 38இலட்சத்து 35ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் மா அரைக்கும் இயந்திரம், எரிவாயு அடுப்பு, எரிவாயு துவிச்சக்கர வண்டி என பல்வேறு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டதாக, வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக தலைமை முகாமையாளர் திருமதி பாத்தும்மா பரீட் தெரிவித்தார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .